மதுரையில் திருநகர் பகுதியில் பர்தா அணிந்த ஆண் நபர்கள் திருடும் நோக்கத்துடன் சுற்றித் திரிவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து திருநகர் போலீஸார் தெரிவித்தது: திருநகர் மற்றும் விஸ்தரிப்பு பகுதிகளான அமைதிச்சோலை நகர், அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பர்தா அணிந்த ஆண் ஒருவரும் மற்றொருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு வீடாகச் சென்று நன்கொடை கேட்டுள்ளனர்.
மேலும் ஆள் இல்லாத வீடுகளையும் அவர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இருவரையும் விசாரிக்க முற்படும்போது இருவரும் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
எனவே வீட்டில் தனியாக இருப்பவர்கள் இது போன்ற நபர்கள் வரும்போது விசாரித்துவிட்டு கதவை திறக்கவேண்டும். சந்தேகப்படும் படியான நபர்கள் வரும் பட்சத்தில் உடனடியாக திருநகர் காவல் நிலையத்திற்கு 0452 2487783 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!
ஜூன் 18-இல் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநருக்கான வேலைவாய்ப்பு முகாம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
மகளிருக்கு இலவச பேருந்து சேவை! கேரள முதல்வர் தொடக்கி வைத்தார்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



