மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மத்திய அரசின் செவிக்கு எட்டும் வரை போராட்டம் தொடரும்: தொல்.திருமாவளவன்

மத்திய அரசின் செவிக்கு எட்டும் வரை போராட்டம் தொடரும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 1:28 am IST

மத்திய அரசின் செவிக்கு எட்டும் வரை போராட்டம் தொடரும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், தாமதப்படுத்தி வரும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் திமுக தலைமையிலான எதிர்க் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவர்களைப் போலீஸார் கைது செய்து, புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.
அப்போது திருமாவளவன் கூறும்போது, 'காவிரிப் பிரச்னையில் தமிழகம் ஒற்றுமையாக இருக்கிறது. ஒருமித்த குரல் எழுப்புகிறது என்பதை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தும் வகையில் மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் செவிக்கு எட்டும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். போராட்டம் நடத்துவதில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே எந்தவிதப் போட்டியும் இல்லை' என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.