கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அகவிலைப்படியை கணக்கிட அறிவியல்பூர்வ ஏற்பாடுகள் இல்லை

அகவிலைப்படியை கணக்கிட மத்திய -மாநில அரசுகளிடம் போதிய அறிவியல்பூர்வ ஏற்பாடுகள் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 2:36 am IST

அகவிலைப்படியை கணக்கிட மத்திய -மாநில அரசுகளிடம் போதிய அறிவியல்பூர்வ ஏற்பாடுகள் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.
அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் 16 -ஆவது மாநாடு, சென்னை மாதவரத்தில் தொடங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்வாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தோழர் சுகுமால்சென் நினைவு ஜோதியை சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பெற்றுக் கொண்டார், நாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எம்.ஆர்.அப்பன் நினைவு ஜோதியை மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பெற்றுக் கொண்டார். மாநாட்டில் அவர் பேசும்போது, 'மத்திய அரசு ஊழியர்களுடன் ஒப்பிடும்போது மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் போதுமானதாக இல்லை. அகவிலைப்படியைக் கணக்கிட மத்திய, மாநில அரசு நிர்வாகத்திடம் அறிவியல்பூர்வமான ஏற்பாடுகள் இல்லை' என்றார் டி.கே. ரங்கராஜன்.
இம்மாநாட்டில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அகில இந்திய தலைவர் கே.கே.என்.குட்டி, வங்கி ஊழியர் சம்மேளன அகில இந்திய தலைவர் சி.ஜெ.நந்தகுமார், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், அகில இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.