தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை: மின்சார வாரியம் விளக்கம்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On :9 ஏப்ரல் 2018, 8:50 pm

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஏப்.1-ஆம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த மாதத்துடன் 4 சதவிகிதம் சர்ஜார்ஜ் வசூலிக்கப்படும் எனவும் சமூக ஊடகங்களில் சில நாள்களாகத் தகவல்கள் பரவி வருகிறது. சமூக வலைதளங்களிலும் மின் கட்டணம்போன்ற புதிய பட்டியலும் வெளியானது. இது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத் தகவலை மின்சார வாரிய அதிகாரிகள் இதை முற்றிலும் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் அளித்த விளக்கம்:
ஏப்.1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தி. புதுச்சேரியில் வெளியான கட்டண உயர்வை சிலர் திரித்து, தமிழகத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக செய்திகளை சமூக வலைதளங்களில் வதந்திகளாகப் பரப்புகின்றனர். ஆனால் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்னால் பொதுமக்களின் கருத்துக் கேட்கப்படும். தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம்தான் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும். இதன் பின்னர் அரசின் ஒப்புதலைப் பெற்ற, கட்டண உயர்வு அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.