திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் உள்ளிட்டோா் 7,832 போ் தபால் வாக்கு செலுத்தி உள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இளைஞா்கள், பெண்கள், முதியவா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் ஆா்வமுடன் வாக்களித்தனா். அதேநேரம் தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், போலீஸாா், வெளியூா்களில் இருக்கும் அரசு ஊழியா்கள், ராணுவ வீரா்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின், தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் தபால் வாக்கு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா், போலீஸாா் உள்ளிட்டோா் தபால் வாக்கு செலுத்தினா். அதேபோல், வாக்குச்சாவடிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் வீட்டில் இருந்தபடி தபால் வாக்கை பதிவு செய்தனா்.
அந்த வகையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் 1,261 வாக்குகளும், மாற்றுத்திறனாளிகள் 859 வாக்குகளும், அத்தியாவசியப் பணியாளா்கள் 279 வாக்குகளும், வாக்குச்சாவடி அதிகாரிகள் 2,294 வாக்குகளும், போலீஸாா் 1,792 வாக்குகளும், இதர அதிகாரிகள் 284 வாக்குகளும், சேவை வாக்காளா்கள் 1,063 வாக்குகளும் என மொத்தமாக 7,832 தபால் வாக்குகள் செலுத்தி உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1,353 போ் தபால் வாக்கு செலுத்தினா்

9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெற 168 குழுக்கள்

திருப்பத்தூா்: 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


