விருதுநகர்: தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வரும் 12 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக , அவருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்றும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவதோடு அன்று கருப்பு சட்டை அணிய வேண்டும் என்றும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்நிலையில் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவார்கள். மத்திய அரசோடு மோதல் போக்கை கடைபிடிக்கும் எண்ணம் எல்லாம் சரி வராது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து சரியானது. காவிரி நீரைப் பெற பிரதமருக்கு உரிய அழுத்தம் கொடுப்போம். காவிரி விவகாரத்தில் மு.க.,ஸ்டாலினின் நடைபயணம் மக்களை திசை திருப்பும் ஒரு நாடகம்.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்துளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


