சேலம் ரயிலில் செல்லாத நோட்டுகள் கொள்ளைபோன வழக்குத் தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2016 ஆகஸ்டில் சென்ற எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் துளையிட்டு ரூ. 5.75 கோடி செல்லாத நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளையில் துப்புத்துலக்க அமைக்கப்பட்ட சிபிசிஐடி தனிப்படை போலீஸார் சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, ஈரோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை செய்தனர். பின்னர் சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகள் முதல் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வரை விசாரணை மேற்கொண்டனர். ஆனால், கொள்ளைச் சம்பவத்தில் இதுவரை எந்தவிதத் துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தமிழக சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் திங்கள்கிழமை சேலம் வந்தார். பின்னர் அவர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள சிபிசிஐடி பிரிவு அலுவலகத்துக்குச் சென்று ரயில் கொள்ளை வழக்கு குறித்து கேட்டறிந்து வழக்கு விசாரணையை முடுக்கி விட்டார்.
மேலும், ரயில் நிலையம் சென்று ஓய்வு அறையில் கோவை மற்றும் சேலம் ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை செய்தார். முதல்கட்டமாக 10 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், மேலும் சில நாள்கள் இந்த விசாரணை நடைபெறும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆசாத் மாா்க்கெட் கொள்ளை வழக்கில் தில்லி காவலா் கைது

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

மக்களுக்கு இலவசமாக ஓஆர்எஸ் பவுடர் வழங்க ஆளுநரிடம் கோரிக்கை!

வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயாா்: மாவட்ட தோ்தல் அதிகாரி!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

