மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திடுமா? ஆர்.ஜே.பாலாஜி கேள்வி

இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு விடும் அப்படித்தானே என்று ஆர்.ஜே.பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2018, 1:53 pm

இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு விடும் அப்படித்தானே என்று ஆர்.ஜே.பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கும் மேலாக அரசியல் கட்சிகள், சில இயக்கங்களும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது. மீறி போட்டி நடந்தால், மைதானத்தில் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று பல்வேறு அமைப்புகள் எச்சரித்திருந்தன. இந்நிலையில், சேப்பாக்கம் மைதானம் செல்லும் சாலைகளில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இப்போட்டியின் இடையில் மைதானத்தில் காலணிகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மீண்டும் பதிவு செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

தற்போது ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டன. இதனால் தேசிய அளவிலான கவனம் தேவை என்று கேட்டவர்களுக்கு அது கிடைத்துவிட்டது. இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு விடும் அப்படித்தானே என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதனால் உங்கள் எண்ணம் காவிரியில் இருந்து கிரிக்கெட்டுக்கும், வன்முறைக்கும் திசை திருப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற மனிதாபிமானமற்ற சுயநல செயல்களை உணர்வுள்ள எந்த தமிழனும் ஆதரிக்கமாட்டான் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டி துவங்கும் முன் விடியோ பதிவை வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நாட்டின் கவனத்தை பெறுவதற்கு நமது 40 எம்.பி-க்களும், 234 எம்.எல்.ஏ-க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும். மாறாக போட்டியை நிறுத்துவது இதற்கு தீர்வாகாது. ஏனெனில் நாம் வாக்களித்தது இவர்களுக்குத் தான் தோனிக்கு அல்ல. இதை சிலர் தங்களது சுய ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நான் வேலைக்கு சென்றால் மட்டுமே எனது குடும்பத்தை காப்பாற்ற முடியும். இளைஞர்களாகிய நீங்கள் இதுகுறித்து முழுமையாக தெரிந்துகொண்டு போராடுங்கள். உங்களை அடுத்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள விட்டுவிடாதீர்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.