சிறுமி ஆசிபாவுக்கு நிகழ்ந்துள்ள கொடூரம் உங்களுக்கு புரிய வேண்டுமெனில் அவள் உங்களது மகளாகத்தான் இருக்க வேண்டுமா? அவள் என்னுடைய மகளாக இருந்திருக்கலாம். ஒரு மனிதனாக எனக்கு கடும் கோபம் வருகிறது. ஒரு தந்தையாக, ஒரு குடிமகனான ஆசிபாவை பாதுகாக்கத் தவறிவிட்டேன். என்னை மன்னித்துவிடு குழந்தையே, உனக்கான பாதுகாப்பான ஒரு நாட்டை நாங்கள் உருவாக்கத் தவறிவிட்டோம். எதிர்காலத்தில் உன்னைப்போல வேறு யாருக்கும் இத்தகைய கொடூரம் நடந்து விடக்கூடாது என்பதற்காக நான் போராடுவேன். நாங்கள் உனக்காக வருந்துகிறோம்; உன்னை மறக்க மாட்டோம்.