தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த பாடுபட்டு வருகிறோம்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த பாடுபட்டு வருவதாக மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2018, 2:01 am IST

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த பாடுபட்டு வருவதாக மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கோடைகால வறட்சியை சமாளிக்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நாடாளுமன்றத்தை 23 நாள்கள் செயல்பட விடாமல் போராட்டம் நடத்தினோம். காவிரி விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்து விட்டால் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பது யார்?. நாடாளுமன்றத்தில் இவ்வளவு அழுத்தம் கொடுத்தும் கண்டுகொள்ளாத மத்திய அரசு, அதிமுக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்தால் எப்படி கண்டுகொள்ளும்.
காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த பாடுபட்டு வருகிறோம். மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதனை ஜனநாயக முறையில் அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் வெற்றி பெறுவோம் என்றார் மு.தம்பிதுரை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.