திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் பட்டப்பகலில் வீடுபுகுந்து 50 பவுன் தங்க நகைகள், ரூ. 5.5 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றோரை போலீஸார் தேடிவருகின்றனர்.
சங்கரன்கோவிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள அம்மா நகரில் 25 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசித்து வரும் யாகப்பன் மகன் பாலமுருகன் (45), அப்பகுதியில் உள்ள தனியார் கோன் அட்டை தொழிற்சாலையில் உதவிப் பொதுமேலாளராக உள்ளார்.
அவர் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினாராம். அப்போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ. 5.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?

நாசிக் டிசிஎஸ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நிதா கான் கைது!

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை!

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

