சென்னை: 11 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும் என்று திமுக செயல்தலைவரான : மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சாதாரண மக்களின் நம்பிக்கைக்குரிய ஜனநாயக அமைப்பு நீதிமன்றம். அதன்மீது அனைத்துத் தரப்பினரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் (ஓ.பி.எஸ்.அணி) எம்.எல்.ஏக்கள் 11 பேரின் தகுதி நீக்கம் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், “எம்.எல்.ஏ.,க்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என சபாநாயகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது”, எனத் தெரிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தாலேயே குற்றம் நிரூபிக்கப்பட்ட ஏ-1 ஜெயலலிதாவின் படம் சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கிலும் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலையிட முடியாத நிலையில், எதற்காக மனுக்களை விசாரணைக்கு எடுத்து, இத்தனை காலம் தீர்ப்பினை தள்ளி வைத்திருக்கவேண்டும் என்பதே சாதாரண மக்களின் கேள்வியாகும். அந்தக் கேள்வியை பிரதிபலிக்கும் பொருட்டு, நீதித்துறை மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுவைக்கு மாநில அந்தஸ்து, கர்ப்பிணிகளுக்கு ரூ. 25,000, மருத்துவக் காப்பீடு ரூ. 25 லட்சம்! தவெக வாக்குறுதிகள்
அயோத்தியில் 200 ஆண்டுகள் பழமையான தேவநாகரி கையெழுத்துப் பிரதி கண்டெடுப்பு!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் பலி: 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்பு

டாப் 3ல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


