தடய அறிவியல் துறையில் காலியாகவுள்ள ஆய்வக உதவியாளர் பணியிட எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தடய அறிவியல் துறையில், 56 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 6 -ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை உள்பட எட்டு தேர்வு மையங்களில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் www.tnpsc.gov.in www.tnpscexams.net ஆகிய இணையதளங்களில் தயாராக உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.