மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காவிரி விவகாரம்: ஆளுநருடன் தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு

காவிரி விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 12:17 pm

DIN

சென்னை: காவிரி விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

மே 3ம் தேதி காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காவிரி விவகாரம் குறித்து பேச பிரதமர் மோடியை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டும் இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.

எனவே, பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துமாறு ஆளுநரிடம் முதல்வரும், துணை முதல்வரும் கோரிக்கை வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.