இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை

பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 9:03 pm

DIN

பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 
அதற்கேற்ப பள்ளிகளையும் அனைத்து வகை வசதிகளுடன் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த கல்வியாண்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கும் முன்பு அந்தப் பணிகளை முடிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளிகளில் அனைத்து விதிகளையும் சரியாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் 7 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
அந்தக் குழுவில் சுகாதாரம், மின்சாரம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துணை அதிகாரிகள் இடம் பெற வேண்டும். அவர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று சொந்த நிலம், போதுமான ஆசிரியர்கள், தீத்தடுப்பு சாதனங்கள் போன்றவை விதிமுறைகளின்டி சரியாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை ஒரு மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும். விதிகளைச் சரியாகப் பின்பற்றாத பள்ளிகளை உடனே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ}மாணவிகளை அருகில் உள்ள வேறு ஒரு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.