அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: அறிக்கை அளிக்க சந்தானம் குழுவுக்கு மேலும் 2 வாரம் அவகாசம்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு, தனது அறிக்கையை அளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 9:11 pm

DIN

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு, தனது அறிக்கையை அளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி தனது கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய செல்லிடப்பேசி உரையாடல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைத்திருந்தார்.
அதிகாரி சந்தானம் மதுரையில் முகாமிட்டு தொடர் விசாரணை மேற்கொண்டார். அருப்புக்கோட்டை கல்லூரி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். பேராசிரியை நிர்மலா தேவியிடமும் அவர் தீவிர விசாரணை மேற்கொண்டார். ஏப்ரல் 30 -ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை அளிக்க ஆளுநர் அவருக்கு கால அவகாசம் அளித்திருந்தார். இந்த நிலையில், சந்தானம் குழுவின் விசாரணை தொடர்வதால், இக்குழுவின் அறிக்கை அளிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.