18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தில் இயற்கை நீதி மீறப்படவில்லை என்று 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவைத் தலைவர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் வாதம் நிறைவடைந்த நிலையில், பேரவைத் தலைவர் தனபால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம் வாதங்களை முன்வைத்து வருகிறார்.
அதில், 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ததில் இயற்கை நீதி மீறப்படவில்லை. போதிய அவகாசம் வழங்கப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியை கலைக்க வேண்டுமென்ற நோக்கில்தான் ஆளுநரை சந்தித்துள்ளனர்.
முதல்வரை மாற்றவேண்டுமென ஆளுநரை சந்தித்தது தவறு என வழக்கறிஞர் சுந்தர் சுட்டிக்காட்டியுள்ளர். சபாநாயகர் தரப்பு வாதம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் முதல்வர் தரப்பு வாதம் தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


