தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்வதால், தமிழகத்தில் காவிரிக் கரையோரத்தின் 6 மாவட்டங்களுக்கு மத்திய நீர் ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்வதால், தமிழகத்தில் காவிரிக் கரையோரத்தின் 6 மாவட்டங்களுக்கு மத்திய நீர் ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இது தொடர்பாக மத்திய நீர் ஆணையத்தின் செயற் பொறியாளர் ஆர். சரவணன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளிலிருந்து கூடுதல் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த இரு அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் இன்னும் இரு நாள்களுக்குள் மேட்டூர் அணையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அணைகளிலிருந்து திறக்கப்படும் நீர் தொடர்பாக அணைக்கு கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கும், தமிழக தலைமைச் செயலர், தமிழக அரசின் மீட்பு, மறுவாழ்வுத் துறையின் முதன்மைச் செயலர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.