நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற சீமானிடம் கேரள போலீஸார் விசாரணை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேரள போலீஸார் விசாரணை நடத்தினர்.
கேரள மாநிலம் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நிவாரணப் பொருட்களைச் சேகரித்து 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கோட்டயம், சங்கனாசேரி முகாமுக்கு அவர்கள் சனிக்கிழமை சென்றனர்.
அந்த முகாமில் அவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு தமிழகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கோட்டயம் கிழக்கு காவல் நிலையத்தில் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற 30-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த நீண்ட விசாரணைக்குப் பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் கொண்ட பதாகைகள் வாகனங்களில் இருந்ததால் போலீஸார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.