சென்னை: சமூக வலைதளங்களில் புதிய கணக்கு தொடங்குவது தொடர்பான வழக்கில் பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் யூ ட்யூப் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
இனி பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், ஜிமெயில் சேவையிலும் புதிய கணக்கு தொடங்குபவர்கள் தங்களது ஆதார் எண்ணை அளித்து பதிவு செய்து கொள்வதைக் கட்டாயமாக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அந்த வழக்கானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி தெரிவித்த கருத்துக்களவான:
இந்த வழக்கு தொடர்பாக அடிப்படை விபரங்கள் கேட்டு அரசுத் தரப்பில் தொடர்பு கொண்ட பொழுது ஏன் பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் யூ ட்யூப் நிறுவனங்கள் முறையான விபரங்கள் அளிக்கவில்லை?
ஏன் இந்தியாவில் இந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் சார்பாக முறையான குறை தீர் அலுவலர்களை நியமிக்கவில்லை?
இந்த நிறுவனங்களின் சேவைகளுக்கு உலக அளவில் அதிக பயனாளர்களைக் கொண்ட ஒரு நாடாக இந்தியா இருக்கும் பொழுது, ஏன் இந்தியாவில் இந்த நிறுவனங்களுக்கு என்று தனியாக அலுவலகம் திறக்கப்படவில்லை?
இத்தகைய கேள்விகளை எழுப்பிய உயர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் முறையாக பதிலளிக்குமாறு இந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சுதந்திர நாள் விழா க்ளிக்ஸ்...

திருவொற்றியூர் பள்ளி மாணவன் கொலை: பெ. சண்முகம் கண்டனம்!
அன்பில் அவன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு 351 எம்எல்ஏ-க்கள் கிடைப்பர்: அன்புமணி
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



