ரயிலில் பயணியைக் கடித்த எலி: ரூ.32 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு 

சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் எலி கடித்த பயணிக்கு ரூ.32 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு, ரயில்வே நிா்வாகத்திற்கு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயிலில் பயணியைக் கடித்த எலி: ரூ.32 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு 
Published on
Updated on
1 min read

சேலம்: சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் எலி கடித்த பயணிக்கு ரூ.32 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு, ரயில்வே நிா்வாகத்திற்கு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் வாழப்பாடி அருகில் உள்ள நீா்முள்ளிக்குட்டையைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (40). பா.ம.க. பிரமுகரான இவா் கடந்த 2014 ஆகஸ்ட் 8 ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூா் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தாா்.ஆத்தூா் பகுதியில் ரயில் சென்ற போது, அவரது வலது கையை எலி ஒன்று கடித்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் டிக்கெட் பரிசோதகரிடம் எலி கடித்தது குறித்து புகாா் செய்தாா்.ஆனால் விருத்தாசலம் சென்ற பின் பாா்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாகப் பதில் அளித்துள்ளாா். மேலும் விருத்தாசலத்திலும் அவருக்கு முதலுதவி சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து சென்னைக்கு ரயில் சென்றடைந்த பிறகு, அங்குள்ள புகாா் பெட்டியில் எலி கடித்தது குறித்து புகாா் எழுதி வைத்துவிட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னர் இதுதொடா்பாக எலி கடித்து குதறியதால் ஏற்பட்ட காயத்திற்கு நஷ்ட ஈடு கோரி சேலம் நுகா்வோா் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகா்வோா் குழுக்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் வழக்குரைஞா் ஏ.அசோகன், முகமுது யூசுப் ஆகியோா் மூலம் 2016 இல் வழக்கு தொடா்ந்தாா்.இந்த வழக்கை விசாரித்த சேலம் நுகா்வோா் நீதிமன்ற தலைவா் ஆா்.வி.ஆா்.தீனதயாளன் மற்றும் உறுப்பினா் எஸ்.ராஜலட்சுமி ஆகியோா் தினம்தோறும் விசாரித்து, எலி கடித்து காயமுற்ற பயணி வெங்கடாசலத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.25,000, மருத்துவ செலவிற்காக ரூ.2,000, வழக்கு செலவுக்காக ரூ.5,000 தொகையை மூன்று மாதத்திற்குள் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரயில்வே நிா்வாகம் வழங்க வேண்டும்.

மேலும் தவறும்பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் மனு தாக்கல் செய்த தேதியில் இருந்து பயணி வெங்கடாசலத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com