தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

பெரம்பலூரில் 7 ஆண்டுகளாக திறக்கப்படாத அருங்காட்சியகம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தனூர் கல்மரப் பூங்கா அருகே, ரூ. 25.14 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டப்பட்டுள்ள ஓய்வுஅறை, அருங்காட்சியகத்தை திறக்க மாவட்ட

News image

கல்மரப்பூங்கா அருகே கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாத அருங்காட்சியகம்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தனூர் கல்மரப் பூங்கா அருகே, ரூ. 25.14 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டப்பட்டுள்ள ஓய்வுஅறை, அருங்காட்சியகத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பெரம்பலூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாத்தனூர் கிராமத்தில், சிற்றோடை ஒன்றின் குறுக்கே நான்கு அடி சுற்றளவும், 12 அடி நீளமும் கொண்ட கல்மரம் ஒன்று உள்ளது. சுமார் ஏழரை கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் தோன்றிய அரிய வகை தாவர இனத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்மரம், பூமியின் காலநிலை மாற்றங்களால் தோன்றிய எரிக்குழம்புகள் குமுறி நில உலகின் பெரும் பகுதிகள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டன. அந்த வகையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் எரிக்குழம்புகளால் மூடப்பட்ட எண்ணற்ற தாவரங்களும், உயிரினங்களும் எரிமலைக் குழம்பில் புதையுண்டதாகக் கூறப்படுகிறது. 
இதனால், சுண்ணாம்பு பாறைகளில் புதைந்து போன அனைத்து வகையான உயிரினங்களும், தாவரங்களும் பல கோடி ஆண்டுகள் மட்காமல் படிமமாக உருமாறி உள்ளன. இவ்வகை படிமங்கள் பாசில்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதுபோன்று படிமமான அரியவகை தாவர இனத்தைச் சேர்ந்த மரம் சாத்தனூரில் உள்ள கல் மரமாகும். 
தாவரத்தின் தன்மையிலும் இல்லாமல், பாறை போன்ற தன்மையிலும் இல்லாமல் உலோகம் போன்று காட்சி தரும் இந்த அரிய வகை படிமத்தை, அனைத்து தரப்பினரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். 
கடந்த 1957 ஆம் ஆண்டு அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்த சாத்தனூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட டேராடூன் வன ஆராய்ச்சி கழகத் தலைவர் எம்.எஸ். கிருஷ்ணன் என்பவரால் கண்டறியப்பட்டு, பின்னர் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டின் கீழ், இந்த அரிய வகை கல்மரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
இந்த கல் மரத்தை சுற்றி மாவட்ட நிர்வாகத்தால் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு புவியியல் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த அரிய வகை கல்மர படிவத்தை வரலாற்று ஆய்வாளர்கள் புவியியல் ஆய்வாளர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என நாள்தோறும் காண்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
16 அடி நீளமிருந்த இந்த கல்மர படிமம் மர்ம நபர்களால் சிறிது சிறிதாக வெட்டி எடுக்கப்பட்டு தற்போது 12 அடி மட்டுமே உள்ளது. இந்த மரத்தை பாதுகாக்கவும், வெளிமாநில மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டுமென சமூகநல ஆர்வலர்கள், கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். 
அதைத்தொடர்ந்து, சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் 2008 - 09 ஆம் ஆண்டில் ரூ. 12.82 லட்சம் மதிப்பீட்டில் ஓய்வு அறை, ரூ. 77 ஆயிரம் மதிப்பில் மின் மோட்டார் அறை, ரூ. 3.09 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் மற்றும் சுற்றுலா வளர்ச்சி திட்டம் 2010- 2011 ஆம் ஆண்டில் ரூ. 9.30 லட்சம் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் கட்டப்பட்டது.  
மேலும், கல்மரம் மற்றும் ஓய்வு அறையைப் பாதுகாக்கும் வகையில் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டு, மாத ஊதியமாக தலா ரூ. 3,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓய்வு அறையும், அருங்காட்சியகமும் கட்டப்பட்டு 7 ஆண்டுகள் கடந்தும், இன்று வரை திறக்கப்படாத நிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.