திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  அமைச்சர்கள் பங்கேற்றனர். 

விழாவில்  கோபுர கலசங்களுக்கு வார்க்கப்படும் புனிதநீர்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  அமைச்சர்கள் பங்கேற்றனர். 

எடப்பாடி பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.  இந்தக் கோயிலில் மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை,  ராஜகோபுரம்  உள்ளிட்ட வற்றில் புனரமைப்புப் பணிகள் 2016-ஆம் ஆண்டில் தொடங்கி நடைபெற்றன.  கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர் சன்னிதியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்துள்ளார்.

இந்த நிலையில்,   கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து,  கும்பாபிஷேக விழாவிலும்,   தொடர்ந்து  நடைபெற்ற கோபூஜையில் முதல்வர் பங்கேற்றார். இதையடுத்து, அவர் தரிசனம் செய்தார்.  முதல்வருடன் அவரது மனைவி ராதா, மகன் மிதுன்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

Story image

கோ பூஜையில் பங்கேற்று, பசுவுக்கு பழம் அளிக்கும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மனைவி ராதா .


நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மக்களவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்,  மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராமதாஸ், எம்எல்ஏக்கள் வெங்கடாசலம், செம்மலை,  ராஜா, மருதமுத்து, வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, இந்து சமய  அறநிலையத் துறை ஆணையர் டி.கே.ராமச்சந்திரன்,உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.