புது தில்லி: ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானர்கள். அதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது.
ஆலை மூடப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு செய்து தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தாக்கல் செய்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது. வேதாந்தா குழுமத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை. மேலும், அவர்களது கருத்தைக் கேட்க வாய்ப்பும் அளிக்கப்படவில்லை.
ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. வேதாந்தா குழுமம் விதிமுறைகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டிருந்தாலும், ஆலையை மூடுவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் நியாயப்படுத்தும் வகையில் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க பசுமைத் தீர்ப்பாயம் கருதுவதாக இருந்தால் விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்பாயம் அறிவித்துள்ளது.
இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்பாயத் தலைவர் ஏ.கே. கோயல் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


