புது தில்லி: சபரிமலைக்குச் சென்று போது தன்னுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்திய கேரள எஸ்.பி.க்கு எதிராக மக்களவையில் பொன். ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்து பேசினார்.
மக்களவையில் இன்று பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இருமுடி ஏந்தி தான் சபரிமலைக்குச் சென்ற போது நேரிட்ட அனுபவங்கள் குறித்து விளக்கினார்.
சபரிமலையில் கேரள அரசின் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். சபரிமலையில் போலீசார் தேவையின்றி பக்தர்களின் வாகனங்களை தடுத்தி நிறுத்தி பிரச்னை செய்கிறார்கள். நிலக்கல் அருகே தன்னுடன் வந்தவர்களின் வாகனங்களை கேரள காவல்துறை எஸ்.பி. தடுத்தி நிறுத்தி, அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதுபோன்ற கெடுபிடிகளால் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வட கொரியாவுடன் அமைதிப் பேச்சு - தென் கொரிய அதிபா்

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 16) - கும்ப ராசிக்கு வெற்றி!

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை ஆண்டு விழா
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



