பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கிடப்பில் மனித உரிமை ஆணையத்தின் 176 நோட்டீஸ்கள்: 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க காவல் துறைக்கு உத்தரவு

மனித உரிமை மீறல் தொடர்பாக விளக்கம் கேட்டு சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு கடந்த ஓராண்டில் அனுப்பப்பட்ட 176 நோட்டீஸ்கள் மீது 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


மனித உரிமை மீறல் தொடர்பாக விளக்கம் கேட்டு சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு கடந்த ஓராண்டில் அனுப்பப்பட்ட 176 நோட்டீஸ்கள் மீது 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையம், அரசு அதிகாரிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்தி, அதுதொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்து வருகிறது. ஆணையத்துக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை காவல் துறையினரின் மீதான மனித உரிமை மீறலாகும்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் துறை உயரதிகாரிகளுக்கு மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும். அவர்களின் விளக்கத்தைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையில் மனித உரிமை ஆணையம் ஈடுபடும்.
176 புகார்கள்: சென்னை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் விளக்கம் அளிக்குமாறு பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையருக்கு 72 நோட்டீஸ்களும், தண்டையார்பேட்டை சரக காவல் இணை ஆணையருக்கு 24 நோட்டீஸ்களும், வேப்பேரி சரக காவல் இணை ஆணையருக்கு 6 நோட்டீஸ்களும், பரங்கிமலை சரக காவல் இணை ஆணையருக்கு 33 நோட்டீஸ்களும், அம்பத்தூர் சரக காவல் இணை ஆணையருக்கு 35 நோட்டீஸ்களும், காவல் துணை ஆணையர்களுக்கு 6 நோட்டீஸ்களும் என மொத்தம் 176 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டும் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
உத்தரவு: இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை. ஜெயச்சந்திரன் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், மனித உரிமை மீறல் தொடர்பாக அனுப்பப்பட்ட 176 நோட்டீஸ்கள் மீது அடுத்த 15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் மனித உரிமை பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.