ரயில் பயணத்தின்போது, சபரிமலை செல்லும் ஐயப்பபக்தர்கள் கற்பூரம் ஏற்றி சுவாமி கும்பிட வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மீறி செயல்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 20-ஆம் தேதி ஹைதராபாதில் இருந்து கொல்லம் சென்ற சிறப்பு ரயிலில் ஐயப்ப பக்தர்கள் கோயம்புத்தூர் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, ஐயப்பனை துதித்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அப்போது திடீரென தீப்பிடித்து சில துணிகள் எரிந்தன. இதையடுத்து சக பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
ரயில்வே பாதுகாப்புப் படையினர், அங்கு வந்து, ஆய்வு செய்து ரயிலில் கற்பூரம் ஏற்றி தீப்பிடிக்க காரணமானவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு, ரயில்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயிலில் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு, சமையல் எரிவாயு, அமிலம், பெட்ரோல், மண்ணெண்ணெய், கற்பூரம் ஆகியவற்றை எடுத்துச் செல்லக்கூடாது.
மேலும், ரயில் பயணத்தின்போது, கற்பூரம் உள்பட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை ஏற்றக்கூடாது. இது ரயில்வே சட்டம் 1989 -இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். மீறி செயல்பட்டால் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
எனவே, ரயில் பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். ரயில் பயணத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை எடுத்து சென்றால், ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


