கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

காலமானார்: வேம்பத்தூர் கிருஷ்ணன் 

எழுத்தாளர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், பதிப்பாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட வேம்பத்தூர் கிருஷ்ணன் (84) வயது மூப்பு காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள

News image
Updated On :26 டிசம்பர் 2018, 1:29 am IST


எழுத்தாளர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், பதிப்பாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட வேம்பத்தூர் கிருஷ்ணன் (84) வயது மூப்பு காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.
சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூரில் ஆ.முத்தையாபிள்ளை, மீனாட்சியம்மாள் தம்பதியின் 8-ஆவது மகனாக 1934-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி வேம்பத்தூர் கிருஷ்ணன் பிறந்தார். பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத இவர் பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளதுடன், தேசியம், தெய்வீகம், ஒளவைத் தமிழ் ஆகிய தலைப்புகளில் 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தான் நடத்தி வந்த சுடர்மணி பதிப்பகம் மூலம் நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, எம்.ஆர்.ராதா உள்ளிட்டவர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குநர், துணை நடிகராகப் பணியாற்றி உள்ளார். அகத்தியர் பெருமை, தியானம், அருமை, திருவரங்க மகிமை உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களுக்கு கதையும், ஹிந்துமித்ரன், சனாதன தர்மபீடம் ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும், தினமணி கதிர், ஆனந்த விகடன், கல்கி உள்ளிட்ட பல வார, நாளோடுகளில் கதை, கட்டுரை, கவிதைகளும் எழுதியுள்ளார். 
இவர்களுக்கு முத்தையா, வாசுதேவன் என்ற இரு மகன்களும், தேவி என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி கே.பாப்பா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
விருது: இவரின் தமிழ்ப் பணியைப் பாராட்டி தமிழக அரசு சார்பில் தமிழ்ச் செம்மல் விருது கடந்த 2015-இல் வழங்கப்பட்டது. மேலும், சுடர்மணிக் கவிஞர், ஆன்மிக ரத்னா, தெய்வத் தமிழ்த் தொண்டர், ஒளவை சண்முகம் உள்ளிட்ட பல விருதுகளை வேம்பத்தூர் கிருஷ்ணன் பெற்றுள்ளார்.
இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சூளைமேடு சங்கராபுரம் 2-ஆவது தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் புதன்கிழமை பிற்பகல் சுமார் 1 மணி அளவில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தொடர்புக்கு- 80722 81721. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.