திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ. 1.85 கோடி மாயமான விவகாரம் கைதான 4 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஏடிஎம்களில் பணம் நிரப்பச் சென்ற வேன் விபத்தில் சிக்கி ரூ. 1.85 கோடி மாயமானதாக நாடகமாடிய வழக்கில் கைதான 4 பேரை 15

Updated On :26 டிசம்பர் 2018, 1:27 am IST


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஏடிஎம்களில் பணம் நிரப்பச் சென்ற வேன் விபத்தில் சிக்கி ரூ. 1.85 கோடி மாயமானதாக நாடகமாடிய வழக்கில் கைதான 4 பேரை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க முதுகுளத்தூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது. கடந்த 20 ஆம் தேதி சாயல்குடி அருகே ஏடிஎம்களில் பணம் நிரப்பக் கொண்டு சென்ற வேன் விபத்தில் சிக்கியதாகவும், அப்போது ரூ.1.85 கோடி மாயமானதாகவும் வேனில் சென்ற ஊழியர்கள் கூறினர்.
இதுதொடர்பாக கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகேசன் நடத்திய விசாரணையில், வேன் விபத்து நாடகம் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள் அன்பு, குருபாண்டி, வீரபாண்டி, கபிலன் ஆகியோரை கடலாடி போலீஸார் கைது செய்தனர்.
மேலும் கைதானவர்களிடம் இருந்து ரூ.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 4 பேரும் செவ்வாய்க்கிழமை காலை முதுகுளத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் இருவரை கைது செய்ய, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.