இந்திய ராணுவத்தின் ராட்சத பலூன் பயணம் மதுரைக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.
இந்திய ராணுவத்தில் சேரும் ஆர்வத்தை இளைஞர்களுக்கு ஏற்படுத்தவும், முன்னாள் ராணுவத்தினர், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ராட்சத பலூன் பிரசாரப் பயணத்தை ராணுவ வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்.
கர்னல் விவேக் தலைமையில் ராணுவ வீரர்கள் 33 பேர் இப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அன்பில் ஜெயக்குமார் (திருச்சி), கோபிநாத் (தேனி), பழனி (வேலூர்) ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
ராட்சத பலூன் பயணம் காஷ்மீரில் நவம்பர் 6-ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 28 ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு பெறுகிறது. பல்வேறு நகரங்களிலும் பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்படுகிறது. இந்த பயணத்தின் 44-ஆவது இடமாக மதுரைக்கு ராணுவ வீரர்கள் குழு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இங்கு ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை (6 ஆம் அணி) வளாகத்தில் உள்ள மைதானத்தில் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. ராட்சத பலூன் பயணம் குறித்து புதன்கிழமையும் (டிசம்பர் 26), வானிலையைப் பொறுத்து செயல்விளக்கம் அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









