தமிழ்நாடு இல்லத்துக்கு பெயர் மாற்றினால் போராட்டம் வெடிக்கும்: மு.க.ஸ்டாலின்
புது தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு பெயர் மாற்றினால், தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


புது தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு பெயர் மாற்றினால், தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர் பேசியது: மதராஸ் ஸ்டேட் என்ற நமது தமிழகத்துக்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் மாற்றினார். இந்த பெயர் மாற்றத்துக்காக அப்போது சென்னையில் நடைபெற்ற விழாவுக்கு, உடல்நலம் குன்றிய நிலையிலும் அண்ணா பங்கேற்றார்.
தற்போது புது தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு பொதிகை, வைகை என பெயர் மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. அங்குள்ள கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலத்துக்கான இல்லங்கள் அந்தந்த பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.
மத்தியில் ஆட்சியாளர்களுக்கு அடிமையாக உள்ளவர்கள் தமிழ்நாடு என்கிற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர். இதனைக் கைவிட வேண்டும். தவறினால், தமிழகத்தில் போôட்டங்கள் வெடிக்கும்.
தமிழகத்தில் முன்பெல்லாம் சீர்திருத்த திருமணங்கள் அதிகம் நடைபெறாது. கடந்த 1967-இல் அண்ணா முதல்வரான போது, சீர்திருத்த திருமணங்கள் செல்லும் என சட்டம் இயற்றினார். சட்ட அங்கீகாரம் கிடைத்த பின், அதிக எண்ணிக்கையிலான சீர்திருத்த திருமணங்கள் நடைபெறுகின்றன. இதனால், சம்பிரதாய திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களை காட்டிலும் நமக்குத்தான் திருமணங்களை நடத்தி வைக்க அதிக அழைப்பு வருகிறது.
தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் தான் அரசு நலத் திட்டங்கள் வழங்கப்படும் என்பதை போல பேசியுள்ளார். மக்கள் வரிப் பணத்தில், மக்களுக்காக கொண்டுவரப்படும் திட்டங்களில், கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே தர முடியும் என்பது போல அவரது பேச்சு உள்ளது. இது தவறான போக்கு.
முந்தைய திமுக ஆட்சியில் ரூ.7,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் அதிமுகவினர்தான் அதிகம் பயன்பெற்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு நலத் திட்டங்கள் வழங்க வேண்டும்.
மக்களைப் பற்றி கவலை இல்லாத இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என தமிழக மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆட்சியின் நாள்கள் தற்போது எண்ணப்படுகின்றன. மாற்றத்துக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...