பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்லத் தடை: ஜி.கே.வாசன் கண்டனம்

கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க மீனவர்கள் நாட்டுப் படகில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 8:26 pm

DIN

கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க மீனவர்கள் நாட்டுப் படகில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 1905 முதல் 2013 வரை சுமார் 100 வருடங்களாக மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் நாட்டுப்படகில் சென்று வந்ததை மத்திய அரசு தடுப்பது ஏற்புடையதல்ல. 
மேலும், மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்ல தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் 2017-ஆம் ஆண்டே அறிவுறுத்தியது. ஆனால் இதுவரை சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் திருவிழாவுக்கு நாட்டுப் படகில் செலவின்றி சென்று வந்த ஏழை மீனவர்கள் தற்போது நாட்டுப்படகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே, கச்சத்தீவில் நடைபெற உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு மீனவர்கள் வழக்கம்போல் நாட்டுப் படகில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். மேலும், தமிழக அரசு மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுத்து மீனவர்கள் நாட்டுப் படகில் சென்று வர அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.