ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மினி லாரி கவிழ்ந்து 2 பேர் சாவு

கடலூர் அருகே மினி லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 7:56 pm

DIN

கடலூர் அருகே மினி லாரி கவிழ்ந்த விபத்தில் இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டில் தனியார் மரம் அறுப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்த புதுவை மாநிலம், குருவிநத்தத்தைச் சேர்ந்த சம்பந்தம் உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கில் அந்த நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருவோர் பங்கேற்று விட்டு, மினி லாரியில் திங்கள்கிழமை ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த லாரியை மாளிகம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி ஓட்டினார்.
சுந்தரவாண்டி பகுதியில் மினி லாரி வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில், அந்த வாகனத்தில் பயணித்த 20 பேர் காயமடைந்தனர். அனைவரும் அந்தப் பகுதி மக்களால் மீட்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்த அன்பு (40), என்.மூலக்குப்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் (35) ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த, நரியாங்குப்பத்தைச் சேர்ந்த பூங்குணம் (24), துரை (39), ராணிப்பேட்டையைச் சேர்ந்த சீதாராமன் (37), மாணிக்கவேல் (36), சண்முகம் (39), தனசேகர் (28) உள்ளிட்ட 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.