எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காவியை கமல் கொச்சைப்படுத்த வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்

காவியை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 8:02 am

DIN

காவியை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
காவிக்கு வரமாட்டேன் என கமல் கூறுவது சுயநலம். காவியை கொச்சடைப்படுத்த வேண்டாம். ஜெயலலிதா படத்திறப்பில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரை முதல்வராகவே பார்க்க வேண்டும். 

ஜெயலலிதா படத்திறப்பில் அரசியல் செய்கிறது திமுக. அடிக்கடி சமாதிக்கு செல்வதை அமைச்சர்கள் நிறுத்திக்கொண்டால் ஜெயலலிதாவின் மாண்பு காக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

நடிகர் ரஜினிகாந்த் காவி அரசியலை முன்னெடுத்தால், அவருடன் கூட்டணி அமைக்க மாட்டேன்'' என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வருடாந்திர இந்தியர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், இதைத் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.