
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல 'ஹாட் சிப்ஸ்' தலைமை அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள பிரபல உணவகங்களில் ஹாட் சிப்ஸ்சும் ஒன்று. இந்த உணவகத்திற்கு நகரத்தில் அதிக அளவில் கிளைகள் உள்ளன.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'ஹாட் சிப்ஸ்' தலைமை அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிக அளவில் வருமான வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.