மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அரசு கவிழும் என்று எண்ணியவர்களின் எண்ணம் கானல் நீரானது: முதல்வர் பேட்டி! 

இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எண்ணியவர்களின் எண்ணம் கானல் நீராகி விட்டது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 பிப்ரவரி 2018, 9:10 am

DIN

ஆத்தூர்: இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எண்ணியவர்களின் எண்ணம் கானல் நீராகி விட்டது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அ.தி.மு.க. கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்தி விட்டு வெளியே வந்தவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து திட்டங்களும் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எண்ணியவர்களின் எண்ணம் எல்லாம் கானல் நீராகி விட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களை மீறி கடந்த ஓராண்டு காலம் சிறப்பான ஆட்சி நடந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.