"மின்இழப்பைக் குறைக்க ஆய்வு நடவடிக்கை தேவை'
மின்விநியோகத்தில் நேரும் மின்இழப்பைக் குறைக்க ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம் என்று சிங்கப்பூர் நியூ கேசில் பல்கலைக் கழகப் பேராசிரியர் செங்சியான்சின் வலியுறுத்தினார்


மின்விநியோகத்தில் நேரும் மின்இழப்பைக் குறைக்க ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம் என்று சிங்கப்பூர் நியூ கேசில் பல்கலைக் கழகப் பேராசிரியர் செங்சியான்சின் வலியுறுத்தினார்.
மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி மின்னியல், மின்னணுவியல் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் அவர் பேசியது:
உலக அளவில் இந்தியா 3 லட்சத்து 33 ஆயிரம் மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்து 3-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நாட்டின் மொத்த மின்சக்தி உற்பத்தியில் மின்விநியோக திறன் குறைபாடு காரணமாக 40 சதவீதம் மின்இழப்பு ஏற்பட்டது. தற்போது மின் இழப்பு சராசரியாக 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் ஜப்பான், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் தான் மிகக் குறைந்த அளவில் 4 சதவீதம் மின்சக்தி இழப்பு உள்ளது. அமெரிக்கா,பிரிட்டன், ஆகிய நாடுகளில் 6 சதவீதமாகவும்,ஆஸ்திரேலியா,கனடா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 5 சதவீதமாகவும் உள்ளது.
மொத்த மின்சக்தி இழப்பில் மூன்றில் இருமடங்கு இழப்பை ஆராய்ச்சி,தொழில்நுட்ப மேம்பாடு நடவடிக்கைகள் மூலம் சீரமைப்பதன் மூலம் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெற முடியும் என்றார் அவர்.
மலேசியா மாறா பல்கலைக் கழகப் பேராசிரியர் நூர் ஆஷீதா,அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர் என்.குமரப்பன், சாய்ராம் கல்விக் குழுமத் தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து, முதல்வர் சி.வி.ஜெயக்குமார், துறைத் தலைவர் குமரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...