அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மதுராந்தகம் நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்த், ஹாசினியின் தந்தையை மிரட்டிய வழக்கில் மதுராந்தகம் முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:51 pm

DIN

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்த், ஹாசினியின் தந்தையை மிரட்டிய வழக்கில் மதுராந்தகம் முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து எரித்தவர் தஷ்வந்த் (22). இந்த கொலை சம்பவத்துக்காக போலீஸார் தஷ்வந்த்தை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றபோது ஹாசினியின் தந்தை பாபுவை மிரட்டியுள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு காவல் நிலையத்தில் பாபு அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தஷ்வந்த்தை சென்னை புழல் சிறையில் இருந்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வியாழக்கிழமை மதியம் போலீஸார் அழைத்து வந்தனர். ஆனால் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி கிருஷ்டியன், மதுராந்தகம் முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் கூடுதல் பொறுப்பில் வியாழக்கிழமை வழக்குகளை விசாரணை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து, அங்கு தஷ்வந்த்தை அழைத்துச் சென்று இதுகுறித்த தகவலை நீதிபதியிடம் போலீஸார் தெரிவித்தனர்.
பின்னர், இதுகுறித்து விசாரித்த நீதிபதி, தஷ்வந்த்தை வருகிற 8-ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.