நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சம்ஸ்கிருத பாடல்: சென்னை ஐஐடியில் வெடித்த புதிய சர்ச்சை! 

சென்னை ஐஐடியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சம்ஸ்கிருத பாடல் பாடப்பட்டவிவகாரம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2018, 10:37 am

DIN

சென்னை:  சென்னை ஐஐடியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சம்ஸ்கிருதப் பாடல் பாடப்பட்டவிவகாரம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சென்னை ஐஐடியில் தேசிய துறைமுக நீர்வழிப் பாதை கடற்கரைத் துறையினை உருவாக்குவது தொடர்பாக ஐஐடி கடல்சார் தொழில்நுட்பத் துறைக்கும்,மத்திய கப்பல் போக்குவரத்துத் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஐஐடி மாணவர்கள் இருவர் மற்றும் மாணவியர் இருவர்  ஒன்றாகச் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சம்ஸ்கிருதத்தில் அமைந்த கணபதி வாழ்த்துப் பாடல் ஒன்றைப் பாடினார்கள். இதே மாணவர்கள் நிகச்சியின் முடிவில் தேசிய கீதம் பாடினார்கள்.

மத்திய அமைச்சர் ஒருவர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சம்ஸ்கிருதப் பாடல் பாடப்பட்டவிவகாரம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதன் மூலம் திட்டமிட்டு தமிழை அவமானப்படுத்துவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்த ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, 'எந்த பாடலைப் பாட வேண்டும் என்பது மாணவர்களின் தேர்வுதான். மாணவர்களை நிர்வாகம் எப்பொழுதும் இந்தப் பாடலை பாட வேண்டும்; இந்தப் பாடலை பாடக் கூடாது என்று கட்டாயப்படுத்தியது இல்லை. இதில் சர்ச்சைகளை உணடாக்க வேண்டாம்' என்று தெரிவித்தார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.