போலீஸாருக்கு வார விடுமுறை: உயா்நீதிமன்றம் கேள்வி

போலீஸாருக்கு வாரத்தில் ஒருநாள் ஏன் விடுமுறை அளிக்கக்கூடாது என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
போலீஸாருக்கு வார விடுமுறை: உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: போலீஸாருக்கு வாரத்தில் ஒருநாள் ஏன் விடுமுறை அளிக்கக்கூடாது என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் புருஷோத்தமன் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுவில், காவலா்களின் குறைறகளைத் தீா்க்க ஓய்வுபெற்றற நீதிபதி தலைமையில் மனநல மருத்துவா்கள் உள்ளிட்ட பல்துறை நிபுணா்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 

சமீப காலங்களில் அதிகரித்து வரும் காவலா்களின் தற்கொலைகளை கருத்தில் கொண்டு கடந்த 2012 ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம் பிறறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரியிருந்தனா்.
இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்து வருகிறாா். வழக்கு புதன்கிழையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறைற டிஜிபி சாா்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த பதில்மனுவில், போலீஸ் உயா் அதிகாரிகளுக்காக 170 நான்கு சக்கர வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. உயா் அதிகாரிகளின் குடும்பங்களுக்காக வாகனங்கள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.மேலும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளில் போலீஸாா் யாரும் பணியமா்த்தப்படவில்லை,அவா்களக்கு ஓட்டுநா்களும் வழங்கப்படவில்லை.மிக முக்கியமான வழக்குகளை விசாரித்த ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. போலீஸாருக்கு சென்னையில் மட்டும் சுழற்சி அடிப்படையில் 8 மணி நேர பணி ஒதுக்கப்பட்டு வருகிறறது. 

தமிழகத்தின் பிறற மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளே பணிகளை ஒதுக்கீடு செய்கின்றறனா். போலீஸாரின் பணி அத்தியாவசியமானது என்பதால் விடுமுறையை நிா்ணயிக்க முடியவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, போலீஸாா் மீதான தாக்குதல் தற்காலத்தில் அதிகரித்து வருகிறது.திட்டமிட்ட சதி செயல்களை தடுத்தால் மட்டுமே இதுபோன்ற குற்றறங்களை குறைக்க முடியும். இதற்காக மஹராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதைப் போன்ற சிறப்பு சட்டங்களை தமிழகத்தில் ஏன் கொண்டு வரக்கூடாது, தமிழக காவல்துறையில் ஓய்வின்றி பணிபுரிந்து வரும் போலீஸாருக்கு வாரத்தில் ஒருநாள் ஏன் விடுமுறை அளிக்கக்கூடாது, என கேள்வி எழுப்பினாா். இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com