47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே சென்னை வெள்ளப் பாதிப்புக்கு காரணம்: தணிக்கைத் துறை அறிக்கையில் தகவல்

சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ள பாதிப்புக்கு அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என்று கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர்

News image
Updated On :9 ஜூலை 2018, 7:54 pm

DIN

சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ள பாதிப்புக்கு அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என்று கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் இது தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
2015-ஆம் ஆண்டில் சென்னை, புறநகரில் ஏற்பட்ட வெள்ளத்தால் 289 பேர் உயிரிழந்தனர். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு, சென்னையில் இயல்பு வாழ்க்கை பல நாள்கள் முடங்கின.
அரசுக்கு தோல்வி ஏன்?: இந்த விவகாரத்தில் அரசுக்கு தோல்வி ஏற்பட்டதற்கு, ஏரிகள் - நீர்த்தேக்கங்களின் கொள்ளவை உயர்த்துவது, நீர் வழிந்தோடுவதை மட்டுப்படுத்துவது, நீர் பற்றாக்குறைக்கு ஏற்ப உயரும் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் திட்டங்கள், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை போன்றவை பலனற்ற முறையில் கையாளப்பட்டதுதான் காரணம்.
மேலும், அரசுத் துறைகள் மற்றும் முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதும் தோல்விக்கு மற்றொரு காரணம். கட்டுப்பாடு இல்லாத வகையில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளால் வெள்ள நீரின் எளிதான ஓட்டம் தடைபட்டு, சென்னையை மூழ்கடித்தது.
செம்பரம்பாக்கம் ஏரி சர்ச்சை ஏன்?: செம்பரம்பாக்கம் ஏரி மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று. அதன் நீர்த்தேக்கம், நீர்வரத்து பற்றிய அறிவியல்பூர்வமான முன்னறிவிப்பு அமைப்பும், வெள்ளம் பற்றிய முன்னறிவிப்பு அமைப்பும் இருக்கவில்லை. இது மத்திய நீர் ஆணையத்தின் விதிகளுக்கு முரணானது.
செம்பரம்பாக்கம் கரையை ஒட்டிய பகுதியில் சட்டத்துக்கு முரணாக அனுமதிக்கப்பட்ட தனியார் நிலத்தை நீரில் மூழ்காமல் பாதுகாக்க நீர் ஆதாரத் துறை விரும்பியதால் மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.க்கு பதிலாக 3.481 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பில் வைக்கப்பட்டது. கூடுதலாக 0.268 நீரை சேமிக்கும் வாய்ப்பு இருந்ததைப் பார்க்கும்போது, நீர் வெளியேற்றத்தை 6 மணி நேரத்துக்கு 12 ஆயிரம் கனஅடி என்ற அளவில் பராமரித்திருக்க முடியும். ஆனால், 20 ஆயிரத்து 960 கன அடி முதல் 29 ஆயிரம் கன அடி வரை மட்டுமே வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது.
ஒருங்கிணைப்பு தேவை: ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவை. பேரிடர் மேலாண்மைக்கான ஒரு நிறுவன கட்டமைப்பை நிதி தன்னாட்சியுடன் அரசு உருவாக்க வேண்டும் என்று தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.