கொச்சுவேலி-மங்களூர் அந்தியோதயா ரயில் ஆலப்புழையில் நின்று செல்லும்
கொச்சுவேலி -மங்களூர் சந்திப்பு இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் கேரள மாநிலம், ஆலப்புழையில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


கொச்சுவேலி -மங்களூர் சந்திப்பு இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் கேரள மாநிலம், ஆலப்புழையில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பு:
கொச்சுவேலி-மங்களூர் சந்திப்புக்கும், மங்களூர் சந்திப்பு-கொச்சுவேலிக்கும் இடையே அந்த்யோதயா விரைவு ரயில் இயக்கப்படுகிறது. வாரம் இருமுறை இயக்கப்படும் இந்த ரயில் ஆலப்புழையில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் ஜூலை 12 முதல் 2019 ஜனவரி 12 வரை 6 மாத காலத்துக்கு இந்த நடைமுறை அமலில் இருக்கும்.
மங்களூர் சந்திப்பில் இருந்து கொச்சுவேலிக்கு இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரயில் (16356) அதிகாலை 4.58 முதல் 5 மணி வரையிலும், கொச்சுவேலியில் இருந்து மங்களூர் சந்திப்புக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16355) இரவு 11.43 முதல் 11.45 மணி வரையிலும் ஆலப்புழையில் நின்று செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...