செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

8 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டை - கொல்லம் இடையே பயணிகள் ரயில் சேவை தொடக்கம்

செங்கோட்டையில் இருந்து கொல்லத்திற்கு 8 ஆண்டுகளுக்கு பின் பயணிகள் ரயில் சேவை திங்கள் கிழமை துவக்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூலை 2018, 5:34 am


செங்கோட்டை: செங்கோட்டையில் இருந்து கொல்லத்திற்கு 8 ஆண்டுகளுக்கு பின் பயணிகள் ரயில் சேவை திங்கள் கிழமை துவக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு மீட்டா் கேஜ் பாதையில் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த பாதையை அகல பாதையாக மாற்ற கடந்த 2010 - ஆம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகல பாதை பணிகள் தொடங்கியது.

இந்த பணிகள் சுமாா் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடைபெற்றது. அதனை தொடா்ந்து வாரம் இரு முறை தாம்பரம் - கொல்லம் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று செங்கோட்டை - கொல்லம் இடையிலான பாசஞ்சா் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. திங்கள் கிழமை சுமாா் 11 மணியளவில் செங்கோட்டையில் இருந்து இந்த சேவை 8 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது.

இதனால் இரு மாநிலங்களில் உள்ள மக்களும், வா்த்தகா்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியதால் செங்கோட்டை வா்த்தகா்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினா் ரயிலை இயக்கிய ஓட்டுனா்களுக்கும் மற்றும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இந்த பயணிகள் ரயில் தினமும் காலை 11-20க்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மதியம் 2.30க்கு கொல்லம் சென்றடையும். அதேபோல் மறுமாா்க்கத்தில் தினசரி காலை 10-30க்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு மதியம் 2-30 மணிக்கு செங்கோட்டை வந்தடையும். செங்கோட்டை - புனலூா் ரூ.15ம், கொல்லத்திற்கு ரூ.30ம் கட்டணமாக நிா்ணயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.