அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் வேலை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஒரே நேரத்தில் தேர்தல் விவகாரம் குறித்து சட்ட ஆணையத்திடம் கருத்து கூறியுள்ளோம். லோக் ஆயுக்தா தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு சட்டப்பேரவையில் பதில் கிடைக்கும்.
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சென்னை வருகையில் உள்நோக்கம் ஏதும் இல்லை. கட்சியை பலப்படுத்த வழக்கமாக பாஜக தேசியத் தலைவர் மாநிலங்களுக்கு செல்கிறார்.
அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை. முட்டை நிறுவனத்தில் நடக்கும் வருமானவரி சோதனைக்கும் அரசுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


