அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயற்சி மையத்தில் பயிலும் பகுதி நேர மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்புகள்: அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணித் தேர்வுக்காக 225 மாணவர்களுக்கு முழு நேரப் பயிற்சியும், 100 மாணவர்களுக்குப் பகுதி நேரப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
முழு நேரப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் உண்டி மற்றும் உறைவிடத்துடன் கூடிய பயிற்சிக்கான செலவினம் அரசால் முழுமையாக ஏற்கப்படுகிறது.
பகுதி நேரப் பயிற்சி வகுப்புகள் வார நாள்களில் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறுகின்றன.
பகுதி நேரப் பயிற்சிக் கட்டணமாக பயிற்சியாளர்களிடமிருந்து தலா ரூ.3,000 பெறப்படுகிறது.
இந்தத் தொகை மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சிறப்பு விரிவுரையாளர்களுக்கான மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது.
பகுதி நேரப் பயிற்சி பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் அனைவருக்கும் வார நாள்களில் இரவு உணவு, சிற்றுண்டி மற்றும் தேநீரும், வார இறுதி நாள்களில் காலை மற்றும் மதிய உணவு, தேநீர் ஆகியவற்றை வழங்கும் பொருட்டு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணத்துக்கான நிதி ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.56.84 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
மேலும், பகுதி நேரப் பயிற்சி பெறும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் ரூ.3,000-த்தை ரத்து செய்து, அந்தச் செலவினத்தை அரசே ஏற்று, அவர்களுக்கான, சிறப்பு விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.13 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றார் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
பாலிவுட்டில் சாய் பல்லவி! ஏக் தின் பட புதிய டிரைலர்!

திருக்குறள் அடிப்படையில் தவெக தேர்தல் அறிக்கை: வெளியிட்ட விஜய்!

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

