மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரத்த தானம் அளிக்கச் சென்ற இளைஞரின் சிறுநீரகம் திருட்டு: விசாரணை நடத்த எஸ்.பி., உத்தரவு

மதுரையில் ரத்த தானம் அளிக்கச் சென்ற இளைஞரிடம் சிறுநீரகம் திருடப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த மேலூர் டி.எஸ்.பி.க்கு, ஊரகக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On :9 ஜூலை 2018, 8:34 pm

மதுரையில் ரத்த தானம் அளிக்கச் சென்ற இளைஞரிடம் சிறுநீரகம் திருடப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த மேலூர் டி.எஸ்.பி.க்கு, ஊரகக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை ஒத்தக்கடை சுதந்திரா நகரைச் சேர்ந்த ஷகிலா மகன் முகம்மது பக்ருதீன் (18). ஸ்டுடியோ ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 
இந்நிலையில் மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியில் வசித்து வரும் உறவினரான ராஜாமுகமதுவின் மகன் அசாருதீனுக்கு ரத்தம் தேவைப்படுவதாக, ராஜாமுகமதுவும் மற்றொரு உறவினர் பஷீர் அகமதுவும் சேர்ந்து பக்ருதீனிடம் கூறியுள்ளனர். 
இதையடுத்து அசாருதீனுக்கு ரத்தம் கொடுப்பதற்காக முகமது பக்ருதீன், மதுரை வளர்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்றுள்ளார். மருத்துவமனையில் பக்ருதீனிடம் ரத்த தானம் செய்வதற்கான விண்ணப்பத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டு அவரை ஒரு மாதம் மருத்துவமனையில் தங்க வைத்துள்ளனர். இதில், பக்ருதீனின் இடது சிறுநீரகத்தை எடுத்து அசாருதீனுக்கு பொருத்தியுள்ளனர். ஒரு மாதத்துக்கு பின்னர் வீடு திரும்பிய பக்ருதீன் நடக்க முடியாமல், உடல் சோர்வான நிலையில் காணப்பட்டுள்ளார். அதையடுத்து குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர்.
அப்போது பக்ருதீனின் சிறுநீரகம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜாமுகமதுவிடம் பக்ருதீன் குடும்பத்தினர் கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும், தனியார் மருத்துவமனை நிர்வாகமும் மிரட்டல் விடுத்ததாம்.
இதுதொடர்பாக பக்ருதீனின் தாயார் ஷகிலா, மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர். இதையடுத்து மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு மேலூர் டிஎஸ்பிக்கு ஊரகக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.