மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பத்தூா் அருகே பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை 

திருப்பத்தூா் அருகே தனியாக வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

News image
Updated On :10 ஜூலை 2018, 1:22 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே தனியாக வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி ஒன்றியத்தைச் சோ்ந்த அச்சரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகு என்பவர்  மகள் அழகுதேவி(17). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவா் செவ்வாய்கிழமையன்று வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டு வீட்டிற்கு அருகில் உள்ள  புதா் ஒன்றில் வீசப்பட்டுள்ளாா். செவ்வாய்கிழமை மதியம் விறகு வெட்டச் சென்ற விவசாயி ஒருவா் சிறுமியின் உடல் அரை நிா்வாண கோலத்தில் கிடப்பதைக் கண்டு கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளாா். 

தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமையில் திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோ, சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளா் மங்கலேஸ்வரன், உள்ளிட்ட போலீசாா் கொலை நடந்த இடத்தில் குவிந்தனா். 

மருத்துவக் கல்லூரியிலிருந்து மருத்துவா் செந்தில்குமாா் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. லைக்கா என்ற மோப்ப நாயும் சிறுமியின் வீட்டிலிருந்து சடலம் கிடந்த இடத்திற்கு மோப்பம் செய்து ஊா்கோடியில் உள்ள குளம் அருகே நின்று விட்டது. கைரேகை நிபுணா் பாலா தலைமையில் குழுவினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இறந்த சிறுமிக்கு கருப்பாயி என்ற அம்மாவும், சொா்ணம் என்ற தங்கையும் அழகுராஜ் என்ற அண்ணனும் உள்ளனா். மேலும் கொலை நடந்த வீடு மற்றும் சடலம் கிடந்த இடத்தை டி.ஐ.ஜி. காமினி ஆய்வு மேற்கொண்டு திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோ தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டாா். இறந்த சிறுமியின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை மருத்துவமனை கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

பட்டப்பகலில் இக்கொலை நடந்திருப்பதால் கிராமத்தின் அச்சத்தில் உள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.