பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை: சம்பா சாகுபடிக்கான பணிகளைத் தொடங்கிய திருச்சி விவசாயிகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 90 அடியை எட்டும் நிலையில் இருப்பதால், திருச்சி மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை மகிழ்ச்சியோடு தொடங்கியுள்ளனர்.

News image
Updated On :16 ஜூலை 2018, 5:23 am


திருச்சி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 90 அடியை எட்டும் நிலையில் இருப்பதால், திருச்சி மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை மகிழ்ச்சியோடு தொடங்கியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி நடந்து வருவதாக வேளாண் துறை அறிவித்துள்ளது.

இதே போல இந்த ஆண்டு வாழைத்தோட்டங்களும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து 17 கால்வாய்களிலும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான் கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு பருவ மழையும் பொய்த்து, காவிரியிலும் தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் திறந்துவிடப்படும் என்பதால் சம்பா சாகுபடியை மிக உற்சாகத்தோடு துவக்கியிருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.