நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி: உ. வாசுகி தகவல்  

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க கொல்லைப்புறமாக முயற்சி நடைபெற்று வருகிறது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி...

News image
Updated On :17 ஜூலை 2018, 1:38 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க கொல்லைப்புறமாக முயற்சி நடைபெற்று வருகிறது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி பின்வருமாறு:

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றறன. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்தவோ, குறைக்கவோ தமிழக அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள் தங்கச் சங்கிலி அணிந்து கொண்டு வெளியே செல்ல முடியவில்லை. வழிப்பறி கொள்ளைகள் மற்றும் கொலைகள் என பல்வேறு சம்பவங்கள் தொடா்கதையாகி வருகின்றறன. இதை தடுப்பதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற உணா்வு மக்கள் மத்தியில் எழுந்துவிட்டது போன்ற நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறறது. காவல் துறையும், மாவட்ட நிா்வாகமும் தங்களுக்கு சாதகமாக மனு கொடுக்க வருவோருக்கு மட்டும் அனுமதி அளித்துவிட்டு, மக்கள் நலனுக்காக மனு கொடுப்போருக்கு அனுமதியை மறுத்து வருகின்றனா்.

ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், வேலை இழந்தவா்களுக்கு மாற்று வேலை கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து மூடிய ஆலையை திறப்பதற்கு கொல்லைப்புறமாக முயற்சி மேற்கொள்ளக் கூடாது என்றாா் அவா்.

தொடா்ந்து, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்றற நிகழ்ச்சியில் பங்கேற்ற உ. வாசுகி, ஸ்டொ்லைட் போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ. 12 லட்சம் கல்வி உதவித்தொகையை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.