மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஆக. 1 முதல் வருமான வரி சோதனைகளில் பங்கேற்க மாட்டோம்: ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

ஆகஸ்ட் 1 முதல் வருமான வரி சோதனை மற்றும் சர்வேக்களில் பங்கேற்க மாட்டோம் என வருமான வரி ஊழியர்கள் கூட்டமைப்பும் அதிகாரிகள் சங்கமும் அறிவித்துள்ளன.

Updated On :24 ஜூலை 2018, 2:27 am IST

ஆகஸ்ட் 1 முதல் வருமான வரி சோதனை மற்றும் சர்வேக்களில் பங்கேற்க மாட்டோம் என வருமான வரி ஊழியர்கள் கூட்டமைப்பும் அதிகாரிகள் சங்கமும் அறிவித்துள்ளன.
காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், தற்காலிக ஊழியர்களை முறைப்படுத்த வேண்டும், துறையில் பணிபுரியும் கார் ஓட்டுநர்களின் பதவிகளில் ஏற்படும் பாதிப்புகளைக் களைவதற்கு மற்ற ஊழியர்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருமான வரி ஊழியர் சம்மேளனம், வருமானவரி அதிகாரிகள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சம்மேளனத் தலைவர் பி.மீராபாய் தலைமை தாங்கினார். வருமான வரி அதிகாரிகள் சங்க பொதுச் செயலர் இ.இளங்கோ, துணைத் தலைவர் கீதா தேவி, சம்மேளன பொதுச் செயலர் எம்.எஸ்.வெங்கடேசன், நிர்வாகி சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 
போராட்டம் குறித்து பொதுச் செயலர் எம்.எஸ்.வெங்கடேசன் நிருபர்களர்களிடம் கூறியது: வருமான வரித் துறை அதிகாரி பதவியில் இருந்து 2017-18, 2018 - 19-ஆம் ஆண்டுக்கான உதவி ஆணையர் பதவி உயர்வை வழங்க வேண்டும், ஆய்வாளர் பதவிகளில் ஏற்படும் பற்றாக்குறையைப் போக்க மற்ற மாநிலங்களுக்கும் ஆய்வாளர் பதவிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவும், போராட்ட அறிவிப்புகள் குறித்த கடிதமும் கடந்த மே 4-ம் தேதி மத்திய நேரடி வரி ஆணையத் தலைவரிடம் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
மேலும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் வருமான வரி தினத்தை ஊழியர்களும், அதிகாரிகளும் புறக்கணிக்க உள்ளோம். அத்துடன் வரும் ஆகஸ்ட் 1 முதல் வருமான வரிச் சோதனை மற்றும் சர்வேக்களில் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள்.
ஆக. 9-இல் நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டமும், செப். 12-இல் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்த உள்ளோம். கடந்த ஆண்டு நேரடி வசூல் மூலம் ரூ.10 லட்சம் கோடி வசூல் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டது. 
போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில் ஊழியர்களும், அதிகாரிகளும் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்ததின் விளைவாக அந்த இலக்கை விட கூடுதலாக வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.11 லட்சம் கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு உதவும் வகையில் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உரிய பதவி உயர்வுகளை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் மத்திய நேரடி வரி ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.